அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.. ஷூட்டிங் ஜனவரியில் ஸ்டார்ட்!

Tamil

சென்னை : இந்தியில் மாபெரும் வெற்றி பெற்று பல தேசிய விருதுகளை வென்று குவித்த அந்தாதுன் திரைப்படம் இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் இதன் தமிழ் உரிமையை கைப்பற்றிய நிலையில் அதில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க உள்ளார். பரபரப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவான அந்தாதுன் திரைப்படத்தில் இசை மிகப் பெரிய பங்கு வகிக்கும் நிலையில் அதற்கு பிரபல இசையமைப்பாளர் உறுதிபடுத்தப்பட்டுள்ளார்.

இந்தியில் வெளியான பிங்க் திரைப்படம் தமிழில் “நேர்கொண்ட பார்வை ” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அதில் அஜித் கதாநாயகனாக நடித்திருக்க அந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்த தோடு மாபெரும் வெற்றி பெற்று வசூலிலும் செம்ம கல்லா கட்டியது.இந்த நிலையில் இந்தியில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஆயுஷ்மான் குர்ரானா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்திருந்த அந்தாதுன் திரைப்படம் பரபரப்பான திரில்லர் காட்சிகள் உடன் வெளியாகி சக்கைப் போடு போட்டு சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 3 தேசிய விருதுகளை வென்று மாஸ் காட்டியது.

 

 

இந்த நிலையில் அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றியிருக்கும் நிலையில் இதில் அவரது மகன் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க அதற்காக உடல் எடையை தாறுமாறாக குறைத்து பழைய ஃபார்முக்கு வந்துள்ளாராம் பிரசாந்த். இந்தி வெர்ஷனில் தபு மற்றும் ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் தபுவின் சர்ச்சைக்குரிய நெகட்டிவ் ரோல் பிரபலமாக பேசப்பட தபுவின் ரோலில் இப்பொழுது நடிகை சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிம்ரன் மற்றும் பிரசாந்த் ஏற்கனவே ஜோடி, கண்ணெதிரே தோன்றினால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சிறந்த ஜோடி என பலராலும் கொண்டாடப்பட்ட நிலையில் இப்பொழுது பல வருடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் புதிய பரிமாணத்தில் இணைய உள்ளது.

மேலும் இந்தப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான “பொன்மகள் வந்தாள் ” திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜே ஜே பிரட்ரிக் இயக்குகிறார். மேலும் நடிகர் கார்த்தி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.இந்த கதையில் இசை மிக முக்கியமான பங்கு வகிக்க இசையமைப்பாளர் யாராக இருக்கும் என யோசித்து வந்த நிலையில் இசைஞானி இளையராஜா இசை அமைக்க வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் வெளியானதை அடுத்து இப்பொழுது சந்தோஷ் நாராயணன் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி, சென்னை மற்றும் லண்டன் என இதன் படப்பிடிப்பு நடக்க உள்ள நிலையில் ஜனவரி மாதம் முதல்கட்ட ஷூட்டிங் பாண்டிச்சேரியில் தொடங்க உள்ளது.வித்தியாசமான இசையை வழங்குவதில் வல்லவரான சந்தோஷ் நாராயணன் இப்பொழுது ஜகமே தந்திரம் திரைப்படத்தில் பணியாற்றியதை அடுத்து அதன் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதுடன் அந்தாதுன் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகி உள்ளது இந்த படத்திற்கு கூடுதல் பலம் என தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *