ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. அனுஷ்கா ஷர்மா மட்டும் இல்ல நாங்களும் சிரிச்சோம்…பிரபல ஸ்டைலிஸ்ட் கலகல!

Tamil

மும்பை: பாலிவுட் திரைப் பிரபலங்கள் பலருக்கும் ஃபேவரிட் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக இருந்து வரும் அலியா அல் ருபய் அனுஷ்கா ஷர்மாவுடன் படப்பிடிப்பில் கொரோனா பரிசோதனை செய்து முடித்த பின் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இப்போது வெளியிட்டுள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை அனுஷ்கா ஷர்மா இப்பொழுது பிரக்னன்ட்டாக இருக்கின்ற நிலையிலும் போட்டோ ஷூட் எடுப்பதில் இருந்து மட்டும் ஓயவில்லை. பிரக்னன்ட்டிலும் பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வரும் நிலையில் இப்பொழுது அவரின் ஃபேவரிட் ஹேர் ஸ்டைலிஸ்ட் அலியா அல் ருபய் மும்பையில் படப்பிடிப்பில் கொரோனா பரிசோதனை முடிந்த பின் அனுஷ்கா ஷர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

இந்தி திரைப்படத் துறையின் குயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மா நடிகையாக மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு ஷாருக்கானின் வித்தியாசமான தோற்றதில் வெளியான “ஜீரோ” திரைப்படத்தில் மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய அனுஷ்கா ஷர்மா அதன் பிறகு படங்களை தயாரிப்பதில் மும்முரமாக இறங்கி விட்டார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனுஷ்கா ஷர்மா விதவிதமான புகைப்படங்களையும் க்யூட்டான வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலியுடன் இணைந்து  பிரக்னன்ஸியுடன் எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோவை வெளியிட்டு இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் தெரியபடுத்திய இந்த நட்சத்திர கப்புளுக்கு பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

சாதாரண நாட்களிலேயே போட்டோ ஷூட்களில் கலக்கி வரும் அனுஷ்கா ஷர்மா, பிரக்னன்ட்டாக இருக்கும்போதும் தாய்மையின் இனிமையான தருணங்களை ஃபோட்டோ ஷூட் நடத்தி அதையும் சமூக வலைகளில் வெளியிட அதுவும் வைரலாகின. மேலும் நீச்சல் குளத்தில் அனுஷ்கா பிகினி உடையில் நின்று கொண்டு போஸ் கொடுத்திருந்த புகைப்படம் அவராலும் கவரப்பட்ட நிலையில், சமீபத்தில் கணவர் விராட் கோலியுடன் இணைந்து தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்த போட்டோவை வெளியிட்ட அனுஷ்காவிற்கு பிரக்னன்ட்டில் உள்ள போது இது போன்ற விவகாரமான பயிற்சிகளை செய்வது நல்லதல்ல என ஒருபுறம் எதிர்மறையான  விமர்சனங்கள் வந்தாலும், மறுபுறம் இவரது தைரியத்தை  பாராட்டி பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இதற்கிடையில் அனுஷ்காவின் தீவிர ரசிகையும் பிரபல செலிப்ரிட்டி ஹேர் ஸ்டைலிஸ்ட்டுமான அலியா அல் ருபய் இதுவரை யாரும் கண்டிராத அரிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அனுஷ்காவின் ஃபேவரிட் ஹேர் ஸ்டைலிஸ்ட்டான இவர் நடிகைகள் தீபிகா படுகோனே, கேத்ரினா கைஃப், கைரா அத்வானி என பலருக்கும் பர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். அதிலும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் நட்சத்திர விழாக்களில் பெரும்பாலும் இவரது வடிவமைப்பு கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள பிலிம் சிட்டியில் நடிகை அனுஷ்கா ஷர்மா படப்பிடிப்பில் கலந்துகொள்ள அவருடன் ஹேர் ட்ரஸிங் ஸ்டைலிஸ்ட்டாக அலியாவும் சென்றுள்ளார். மேலும் அங்கு தகுந்த பாதுகாப்பு   உபகரணங்களுடன் அனுஷ்கா ஷர்மாவிற்கு டாக்டர்கள் முன்னிலையில் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிந்து டாக்டர்கள் உட்பட அனைவரும் மாஸ்க் போட்டுக் கொண்டு சீரியஸாக நின்று கொண்டிருக்க அனுஷ்கா ஷர்மா மட்டும் செம ஜாலியாக சிரித்துக்கொண்டு இருக்கின்ற ஒரு புகைப்படத்தை அலியா இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இதில் நீங்கள் மட்டும் சிரித்துக்கொண்டு இல்லை மாஸ்க்குக்கு பின்னால் நாங்களும் தான் ஜாலியாக சிரித்துக் கொண்டிருந்தோம் என ” ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு” என்றவாறு படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட மறக்கமுடியாத புகைப்படத்தை பதிவிட்டு அந்த ஜாலியான நினைவுகளை அலியா பகிர்ந்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *