நடிகர் மோகன் நீண்ட தாடியுடன் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. 1990களில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொடர்ந்து வெள்ளி விழாப் படங்களை கொடுத்து வந்தவர் நடிகர் மோகன். பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து பிரிவினரும் இவருக்கு தீவிர ரசிகர்களாக இருக்க உச்ச நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. இடைவிடாத காதல் மன்னனாக காதல் படங்களில் நடித்து வந்த மோகன் சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதில்லை. மெல்ல திறந்தது கதவு,
மௌனராகம், இதயக்கோயில், விதி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல்,உதய கீதம் என எக்கச்சக்கமான திரைப்படங்கள் இவருக்கு தொடர்ந்து வெற்றிகளாக அமைய வருடக்கணக்கில் இவரது படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ் என பல நடிகர்கள் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்க அனைவரும் ஒருமித்தமாக மோகனுக்கு ரசிகர்களாக இருக்க சூப்பர் ஸ்டார் நடிகர் அளவிற்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி உச்சத்தில் இருந்தார். குறிப்பாக இவரது பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வர பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி படமும் வேற லெவல் பிக்கப்பில் சென்றது.
இனி தமிழ் சினிமாவில் மோகன் தான் சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு அனைவராலும் கொண்டாடப்பட்ட நிலையில் திடீரென அவரைப் பற்றிய பல்வேறு வதந்திகளை பரப்பி ஒட்டுமொத்த பெயரையும் புகழையும் ஒரே நாளில் அசைத்துப் பார்த்து இப்பொழுது ஆளே அடையாளம் இல்லாத அளவிற்கு அந்த வதந்திகள் மாற்றிவிட்டது. மிகச் சிறந்த நடிகர் இன்று இந்தியாவே கொண்டாடும் அளவிற்கு உயர்ந்திருக்க வேண்டியவர் ஆனால் இப்பொழுது இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்க மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க நடிக்க உள்ளதாக மோகன்
அறிவித்திருக்க சுட்ட பழம் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது பேட்டிகளின் மூலம் மோகன் தோன்றி வர இப்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக புது கெட்டப்பில் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோகனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதுவரை பார்த்த வரையிலும் நீட்டாக ஷேவ் செய்து கொண்டு பார்க்க அழகாக இருந்த மோகன் இப்போது இதுவரை கண்டிராத அளவிற்கு நீண்ட தாடியுடன் பார்க்கவே
வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். அதாவது இப்பொழுது குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்காக தான் நீண்ட தாடியை வளர்த்து வருகிறார் என சொல்லப்படுகிறது. எனவே அதே கெட்டப்பில் தான் சமீபத்திய நிகழ்ச்சிக்கும் சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.90களில் வெற்றிகரமாக வலம் வந்த பல நடிகர்களும் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில் மோகனும் விரைவில் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.