இயக்குனர் மணிரத்னம் தயாரித்து இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து அமிதாபச்சன் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சரித்திர கதைகள் என்று எடுத்து பார்த்தால் மிகக்குறைவாகவே இருக்கும். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் சரித்திரப் படங்களின் வரத்து மிகக் குறைவாகவே இருக்கும் நிலையில் கல்கியின் கைவண்ணத்தில் உருவான நாவலான பொன்னியின் செல்வன் தமிழில் இருக்கும் நாவல்களிலேயே மிகச் சிறப்பு பெற்றது. இந்த நாவலைப் பற்றி பலரும் பல்வேறு விதமாக புகழ்ந்து பேசி வருவதை இன்றளவும் நம்மால் காண முடிகிறது. இவ்வளவு
அற்புதமான நாவலை பலரும் திரைப்படமாக்க முயற்சித்து அது முடியாமல் போக இயக்குனர் மணிரத்னம் இந்த நாவலை திரைப்படமாக உருவாக்கி வருகிறார். பெரும்பாலான காதல் திரைப்படங்களுக்கும், கேங்க்ஸ்டர் திரைப்படங்களுக்கும் பெயர் போன இயக்குனர் மணிரத்னம் இப்போது முதன்முறையாக ஒரு சரித்திர திரைப்படத்தை இயக்க அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. அதிலும் இந்த நாவல் மிகப் பிரபலமானது பல்வேறு பெருமைகளைக் கொண்டது என்ற அறிவிப்பினால் மணிரத்னம் இந்த படத்தை எவ்வாறு உருவாக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்க தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில்
பொன்னியின் செல்வன் உருவாகி வருகிறது அதனால் பல மொழிகளில் இருந்தும் பிரபலமான நடிகர் நடிகைகள் எந்த படத்தில் நடித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர்கள் கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி,விக்ரம், கீர்த்தி சுரேஷ், திரிஷா, விக்ரம் பிரபு,பிரகாஷ்ராஜ், பாலாஜி சக்திவேல், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற தென்னிந்திய நடிகர்களும் பாலிவுட்டிலிருந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க இருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த சமயத்தில் தான் தாக்கம் மிக அதிகமாக பரவி கடந்த சில மாதங்களாகவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்
சிட்டியில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இதில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் கலந்து கொள்ள படப்பிடிப்பு இப்பொழுது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ல கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வர இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த அமிதாப்பச்சன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. படத்திலிருந்து விலகியதற்கு முக்கியமான காரணம் அவர் பலமுறை கொடுத்த தேதிகளை பயன்படுத்தாமல் போனதே காரணம் என அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் ஆழ்ந்து போயிருக்க இதர நடிகர் நடிகைகளின் காட்சிகள் மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. அமிதாப்பச்சன் நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்திலிருந்து அமிதாப் பச்சன் விலகியது பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த தகவலை கேட்டு அடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினியும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.