Andrea Jeremiah about master

மாஸ்டர் படத்தில் நடித்ததால் மார்க்கெட் இழந்ததாக புலம்பும் பிரபல இளம் நடிகை!

Articles Tamil

சென்ற மாதம் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மார்க்கெட் இழந்து விட்டது என புலம்பி வருகிறாராம் பிரபல நடிகை ஒருவர். ஆரம்ப கட்டத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்தை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகை இப்பொழுதும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் கதை கூட கேட்காமல் நடிக்க ஒப்பந்தமாகி வருவதை வழக்கமாக கொண்டிருக்க, தனக்குத் தானே செய்வினை வைத்துக் கொண்டது போல அவருக்கே வினையாக வந்து முடிந்தது . மாஸ்டர் படத்திற்கு பிறகு வரும் வாய்ப்புகள் அனைத்தும் உப்புச்சப்பில்லாத

Andrea Master Movie photo

ஒரு ஓரமாக ஒப்புக்கு வந்து செல்வது போலவே இருக்க டென்ஷனான நடிகை இனி இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடாது என புலம்பி வருகிறாராம். தனது இனிமையான குரலால் போதை ஏற்றும் பல பாடல்களைப் பாடி தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா ஹீரோயின்களுக்கு இணையாக மிகவும் அழகாக இருந்ததால் படங்களில் நடிக்கவும் தொடங்கினார். இதுவரை இல்லாத உணர்விது மற்றும் கூகுள் கூகுள் என எக்கச் சக்கமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள இவரது குரலுக்கு ரசிகர்கள் எந்த அளவிற்கு அடிமையாக இருக்கின்றார்களோ அதேபோல்

Andrea Latest Image

அவரது நடிப்பிற்கு பலர் ஏங்கிக் கிடக்கின்றனர். கதாப் பாத்திரத்திற்கு தேவை என்றால் கூட நடிக்கத் தயார் என சொல்லிவரும் ஆண்ட்ரியாவுக்கு ஆரம்பத்தில் அமைந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் முத்து முத்தாக அமைய ரசிகர்களின் பாராட்டுக்கள்லோடு கெத்தாக வலம் வந்தார். சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களுடன் காதல் வலையில் விழுவது என அடிக்கடி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆவது அனைவரும் அறிந்ததே அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத்துடன் மிகவும் நெருக்கமாக இருக்கும்போது உதட்டு முத்தம் வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில்

Andrea

லீக்காகி பேசப்பட்டது. அதேபோல திரைப்படங்களிலும் ஆடை இல்லாமல் நடிப்பது,முத்தக்காட்சிகளில் நடிப்பது, படுக்கை அறை காட்சியில் நடிக்க ஒத்துக் கொள்வது என கதைக்கு தேவைப்படும் சர்ச்சைக்குரிய பாத்திரத்தில் நடித்து வந்தா ஆண்ட்ரியாவுக்கு வடசென்னை, தரமணி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. இவ்வாறு கதையின் நாயகியாக கெத்தாக வலம் வந்த ஆண்ட்ரியா சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் உங்களுக்கு முக்கியமான கதாபாத்திரம் எனக்கூறி ஒப்பந்தம் செய்துவிட்டு படத்தில் ஒருசில காட்சியில் மட்டும் வரும் சப்போர்ட்டிங் ரோல் போல பயன்படுத்தி விட்டார்கள்,

Andrea Latest Photo

இந்த படத்திற்கு பிறகு வரும் கதாபாத்திரங்களும் இதேபோல மிகவும் மட்டமானதாக வருகிறது என புலம்பி வரும் ஆண்ட்ரியா. கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இனி முன்னணி நடிகர்களின் படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடிக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளாராம். அந்த அளவிற்கு மாஸ்டர் படம் இவரை புலம்பவிட்டு விட்டது என கூறுகிறது கோலிவுட் வட்டாரங்கள். மேலும் பல படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா இப்பொழுது மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2ஐ மட்டுமே மலைபோல நம்பி உள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *