அமுல் பேபி போல பளபளன்னு இருக்கும் பிரபல தமிழ் இளம் நடிகை ஒருவர் 40 வயது தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருக்கும் ஒருவரின் காதல் வலையில் விழுந்துள்ளார். படங்களில் மட்டுமே ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும் ரொமான்ஸ் நடைபெறுகிறது ஆனால் நிஜத்தில் அப்படியல்ல இயக்குனர்கள் அல்லது தயாரிப்பாளர்களின் காதல் வலையில் சிக்கி நடிகைகள் பலர் ரொமான்ஸ் செய்து வந்த கதை பலவற்றை நாம் பார்த்து வந்திருக்கிறோம். அந்த வகையில் இப்போது லேட்டஸ்டாக அனைவருக்கும் மிகவும் பிடித்த பிரபல இளம் நடிகை 40 வயது ஆன தயாரிப்பாளரும் இயக்குனருமாக இருக்கும் ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக அரசல்புரசலாக தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவிற்கு சமீபத்திய வரவாக வந்து நடித்த இரண்டே திரைப்படங்களில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர் 23 வயதே ஆன நடிகை அனு இமானுவேல். மலையாளத்தில் ஓரிரு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர் ஆக்சன் ஹீரோ பிஜு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டு இப்பொழுது தெலுங்கில் ரொம்பவும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. நடிகைகள் பலரும் ஹீரோக்களை விரும்புவதை விட
அதிகமாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களை விரும்புவது தான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. அதற்கு பணம் பேர் புகழ் உள்ளிட்டவைகளாக சொல்லப்படுகிறது. ஹீரோக்களில் மார்க்கெட் இருக்கும் வரையில் தான் அவர்கள் ஹீரோக்கள் இல்லையென்றால் ஜீரோக்கள் என்பதை நன்கு புரிந்து கொண்ட ஹீரோயின்கள் பெரும்பாலும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வலைவிரித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அனு இமானுவேல் பிரபல இயக்குனர் ஜோதி கிருஷ்ணா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ஆக்சிஜன்.
இந்த படத்தை ஜோதி கிருஷ்ணா இயக்கிய இருக்க இவரது அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான ஏ எம் ரத்னம் இந்த தயாரித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அனு இமானுவேல் ஜோதிகிருஷ்ணாவும் மிக நெருக்கமாக பழகி வருவதாக அப்போதே தகவல்கள் அரசல்புரசலாக வெளியாகியிருந்தது. அந்த ஹாட்டான இப்பொழுது காதலாக துளிர் விட்டு காதல் புறாக்களாக இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜாலியாக சுற்றித் திரிந்து டேட்டிங் செய்து வருவதாக தெலுங்கு வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மிகவும் நெருங்கிய வட்டாரத்திற்கு மட்டுமே இந்த காதல் கதை விஷயம் தெரிந்திருக்க,
இதைப்பற்றி அனு இமானுவேல் வாயே திறக்காமல் தீரா காதலை ஜோதி கிருஷ்ணாவின் மீது தீர்த்துக்கொட்டி வருகிறாராம். மேலும் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் தனித்தீவு வெளிநாடு என சுற்றித்திரியும் இவர்களது இந்த காதல் விவகாரம் விரைவிலேயே வெளிச்சத்திற்கு வரும் என நம்பப்படும் நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்களா அல்லது டேட்டிங்கோடு அனைத்தையும் முடித்துக்கொண்டு டாடா பாய் பாய் சொல்லிவிடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறது டோலிவுட் வட்டார வாசிகள்.