அப்போ அஜித் கூட சண்டை இப்போ விஜய் கூட.. மிரட்டும் பிரபல ஹீரோ!

Articles Tamil

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தனது 64வது திரைப்படம் மாஸ்டரை தொடர்ந்து 65வது திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகிய நிலையில். அந்த ப்ராஜக்ட் பட்ஜெட் காரணமாக தள்ளிப்போக இப்பொழுது கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

Nelson Deelipkumar

விஜய் டிவியில் பல வருடங்களாக பணியாற்றி வந்த நெல்சன் தனது அறிமுக திரைப்படமாக வேட்டை மன்னன் இயக்க சிம்பு நடித்து வந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு சென்ற நிலையில் சில பிரச்சினை காரணமாக அந்த திரைப்படம் ட்ராப் ஆகி கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு நீண்ட வருடங்களாக திரைப் படங்கள் இயக்காமல் இருந்த நெல்சன் 2018 ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதுவரை காமெடியனாக நடித்து வந்த யோகி பாபு கோலமாவு

Sivakarthekiyan & Nelson

கோகிலா திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து காமெடியில் அனைவரையும் கலங்க வைத்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் நயன்தாராவுடன் ஒரு டூயட் பாடலும் செம ரொமான்டிக்காக பாடி இருக்க கல்யாண வயசு பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி மாபெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு அறிமுக திரைப்படமே பிரம்மாண்ட வெற்றியை கொடுக்க தனது இரண்டாவது திரைப்படத்தில் நீண்ட கால நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் ஹீரோவாக வித்தியாசமான த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் டாக்டர் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இப்பொழுது ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் விறுவிறு

kolamuvu kokila Shooting

வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. டாக்டர் திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் இதன் டிரைலர் வெளியீட்டு தேதியை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அடுத்த திரைப்படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் நெல்சன். பொதுவாக விஜய் திரைப்படம் என்றாலே மாஸ்,கிளாஸ் மற்றும் காமெடி என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் திரைப்படமாக இருக்கும். நெல்சன் இயக்க இருக்கும் விஜய் 65 திரைப்படமும் அதே மாதிரி கமர்சியல் திரைப் படமாக இருக்கும் என சொல்லப்படுகின்ற வேளையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, அனிருத் இசையமைக்கிறார்.

Vijay Thalapathy

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகி உள்ளிட்ட நடிகர் நடிகைகளின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் இதில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டு கொண்டிருந்த அருண் விஜய் என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்து தெறிக்க விட்டதோடு கோலிவுட்டுக்கு அதிரடியான கம்பேக்கும் கைகொடுத்து அனைவரையும் அசர வைத்தார். என்னை அறிந்தால் திரை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து மிரட்டிய அருண் விஜய் அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்

Arun vijay

படங்களில் ஹீரோவாக வெற்றிகளை குவித்து வரும் நிலையில் விஜய் 65 திரைப்படத்தில், வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே அஜித்துக்கு வில்லனாக நடித்து மிரட்டிய அருண் விஜய் விஜய்யுடன் வில்லனாக நடித்தால் படம் வேற லெவலில் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வர விரைவில் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. நடிகர் அருண் விஜய் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *