16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பரத் மற்றும் சந்தியா .. வைரலாகும் புகைப்படம்!

Articles Tamil

2004ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்தது. இதில் நடிகை சந்தியா கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சி பார்க்கும் அனைவரின் கண்களிலும் நீர் வரவழைத்த நிலையில், மக்களால் சிறந்த திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டது. காலங்கள் கடந்தும் இன்று வரை மிகச் சிறந்த திரைப்படமாக கொண்டாடப்பட்டு வரும் காதல் திரைப்படத்தில் நடித்த ஜோடி இப்பொழுது 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரலாகி வருகிறது.


பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாலாஜி சக்திவேல் இயக்குனராக அறிமுகமான “காதல்” திரைப்படத்தை ஷங்கர் தயாரித்திருக்க இந்தப்படம் உண்மையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிய பரத் இதில் கதாநாயகனாக நடிக்க புது வரவாக நடிகை சந்தியா கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஐஸ்வர்யா மற்றும் முருகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தில் அழுத்தமான காதலையும், கெளரவம் என்ற பெயரில் காதலர்களின் மீது நடத்தப்படும் ஜீரணிக்க முடியாத கொடுமைகளையும், வன்முறைகளையும் எதார்த்தமாக படம் பிடித்து காட்டியிருந்த இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு பல்வேறு பிரபலங்களும் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில் இந்த திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருதுகளும் வழங்கப்பட்டது. தமிழில் முதல் முறையாக அறிமுகமான சந்தியா காதல் திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில் முதல் படத்திலேயே எக்கசக்கமான ரசிகர்களை பெற்றதைத் தொடர்ந்து இன்றுவரை பல்வேறு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்திருந்தாலும் காதல் திரைப்படம் பெற்றுத்தந்த நற்பெயரை போல வேறு எந்த திரைப்படமும் இவருக்கு அமைய வில்லை அதனாலேயே இன்று வரை “காதல் சந்தியா” என அடையாளப் படுத்தப்பட்டு அழைக்கப்படும் வருகிறார்.

இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது 16 ஆண்டுகள் கழித்து பரத் மற்றும் சந்தியா மீண்டும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வர, நடிகர் பாரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 17 இதே நாள் காதல் திரைப்படம் வெளியானது, இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்னுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றியது. காதல் திரைப்படம் ஒரு எட்டமுடியாத மைல்கல் என நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார். இவ்வாறு 16 ஆண்டுகளுக்குப் பிறகு பரத் மற்றும் சந்தியா மீண்டும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வரும் நிலையில் மீண்டும் இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *