எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் நடிகர் தனுஷ்.. பிரபல காமெடி நடிகர் உருக்கம்!

Articles Tamil

நடிகர் தனுஷ் இல்லை என்றால் நான் இன்று இந்த நிலையில் இருக்க முடியாது. அவர் எனக்கு வாய்ப்பு தரவில்லை வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என தனுஷை பற்றி பேசியுள்ளார் பிரபல காமெடி நடிகர். சினிமாவில் ஒருவரின் கையை தட்டிவிட நூறு பேர் இருந்தால் கைப்பிடித்து தூக்கிவிட ஆயிரம் பேர் இருப்பார்கள் என சொல்லுவார்கள் அந்த வகையில் நடிகர் தனுஷ் எக்கச்சக்கமான திறமையான பிரபலங்களை உருவாக்கி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்பொழுது முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரை தனுஷ் கொடுத்த வாய்ப்புதான் உயர்ந்த இடத்தில் கொண்டுபோய் வைத்துள்ளது என்பது பலரும் அறிந்ததே.

நடிகர் தனுஷின் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் வளரும் கலைஞர்களை தட்டிக் கொடுத்து தூக்குவதில் அவரை மிஞ்ச ஆளே கிடையாது. அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத்தை தனது 3 படத்தின் மூலம்தான் முதன்முறையாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார். இதேபோல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் முதல்முறையாக தனுஷின் 3 படத்தில் தான் காமெடியனாக அறிமுகம் செய்யப்பட்டார். பின் ஹீரோவாக எதிர் நீச்சலில் நடிக்க வைத்து அழகு பார்த்து அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார். மெரினா, மனம் கொத்தி பறவை போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த கார்த்திகேயனுக்கு முழு வெற்றி படமாக எதிர்நீச்சல்

அமைந்து மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது மக்களும் இவரை ஹீரோவாக ஏற்றுக்கொண்டனர். சிவகார்த்திகேயன், அனிருத்தைத் தொடர்ந்து நடிகர் ரோபோ சங்கரையும் தனுஷ் தான் கை கொடுத்து தூக்கி விட்டார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து தயாரித்த மாரி திரைப்படத்தில் ரோபோ சங்கரின் காமெடி மிக பிரபலமாக பேசப்பட்டு கவனிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இது மட்டுமல்லாமல் பல கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் தெரிந்தும் தெரியாமலும் தனுஷ் ஏகப்பட்ட உதவிகளை செய்து வருவது அவ்வப்போது செய்திகளின் மூலம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷின் ரசிகர் ஒருவரின் உணவகத்தை திறந்து வைத்துப் பேசிய

ரோபோ சங்கர் நடிகர் தனுஷ் தனக்கு செய்த உதவிகளை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அவ்வாறு அதில் பேசியதாவது, தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை வாழ்க்கை கொடுத்துள்ளார். தென்னிந்தியாவிலேயே மிக அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தனுஷ்தான். தன்னைப்போலவே சுற்றியிருக்கும் அனைவரையும் ரசிகர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைப்பவர். கொரோனா ஊரடங்கில் மற்றவர்களைப் போல நானும் மிகப்பெரிய நெருக்கடியில் இருந்தேன். அப்பொழுது அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய உதவி செய்தார். மேலும் ஒரு பிரச்சினையில் நான் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தேன். பிறகு தனுஷுக்கு போன் செய்து பேசினேன்

அப்போது அவர் டெல்லிக்கு அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். அந்த சூழலில் தனுஷிடம் இதைக் கேட்கலாமா வேண்டாமா என தயங்கி தயங்கி கேட்டேன். ஆனால் அவரோ தயங்காமல் மிகப்பெரிய உதவியை என் குடும்பத்திற்காக செய்தார். நானும் என் குடும்பமும் இன்று மூன்று வேளை நிம்மதியாக சாப்பிடுகிறது என்றால் அதற்கு அன்று தனுஷ் செய்த உதவிதான் காரணம் என்பதை நான் எப்போதும் மறக்கமாட்டேன் . இன்று நான் இந்த நிலைமையில் உயர்ந்திருப்பதற்கும் தனுஷ் தான் காரணம் அவர்தான் வாழ்க்கை கொடுத்துள்ளார். இவ்வாறு அந்த உணவகத் திறப்பு விழாவில் நன்றி மறவாமல் ரோபோ சங்கர் பேசியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *