Dhanush Jagame Thandhiram Teaser Out

கோலிவுட் பாதி ஹாலிவுட் பாதி கலந்து செய்த ஜகமே தந்திரம்.. வெளியானது அட்டகாசமான டீசர்!

Articles Tamil

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு சென்றதற்கு விஜய்க்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்து தனுஷ் தன்னுடைய திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்ற கடும் கோபத்தில் தயாரிப்பாளரின் மீது இருக்கிறாராம். தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் அசால்ட் செய்து வரும் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா படத்தின் மூலம் இந்திய அளவில் அனைவராலும் உற்று நோக்கப்படும் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்க சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் ஜகமே தந்திரம் படத்தை இவர் இயக்கியுள்ளார்.

பீட்சா படத்தை தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மற்ற அனைத்து படங்களும் கேங்க்ஸ்டர் படங்களாகவே அமைந்திருக்க கேங்ஸ்டர் இயக்குனர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். பேட்ட படத்தில் 80களில் வலம் வந்த துள்ளலான ரஜினியை மீண்டும் கண்முன் கொண்டுவந்து காட்டி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்ததோடு இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. பேட்ட தொடர்ந்து மருமகனும் நடிகருமான தனுஷ் உடன் இணைந்து ஜகமே தந்திரம் என்ற படத்தை இயக்கி வர இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க புஜ்ஜி பேபி,

மற்றும் ரகிட ரகிட என வெளியான இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று சமூக செமயா கலக்கியது. இவ்வாறு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஜகமே தந்திரம் படத்தில் தமிழ் நடிகர்கள் மட்டும் அல்லாமல் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படமும் கேங்ஸ்டர் ஃபார்முலாவிலேயே உருவாக்கப்பட்டிருக்க இப்பொழுது இதன் டீசர் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. ஆரம்ப காட்சியிலேயே யார் அந்த சுருளி என ஹாலிவுட் டான் கேட்க சுருளி நீங்க பாத்ததுலேயே மிகப்பெரிய கேங்ஸ்டர்


என கூரியவாறு ஆரம்பமாக ” சுருளி நீ ஒரு ரவுடி பயிலாம்டா, நேத்துக்கூட ஒரு கூட கொலைய பண்ணிட்டு தான் வந்திருக்கிறியாம்டா” என வடிவுகரசி கூறிய உடனேயே பெரிய முறுக்கு மீசை வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு அரசியல்வாதி போலவே கையெடுத்துக் கும்பிட்டு ரயிலில் நடந்துவர, மாவு பிசைவது, வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டு சண்டை போடுவது , சூறாவளி வேகத்தில் ரகிட பாடலுக்கு ஆடுவது ஐஸ்வர்யா லட்சுமியுடன் ஒரே ஒரு காட்சியில் ரொமான்ஸ் என செம ஸ்பீடில் செல்லும் டீசரில் கடைசியாக வில்லனுடன்

இருக்க அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என வில்லன் கூற சரி பொத்திட்டு போடா என தனுஷ் கூறும் வசனங்கள் தெறிக்கிறது. மொத்தத்தில் கார்த்தி சுப்புராஜ் இதுவரை இயக்கிய படங்களிலேயே வித்யாசமான கேங்ஸ்டர் படமாக கோலிவுட் பாதி ஹாலிவுட் பாதி கலந்து செய்த கலவையாக வெளியாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் வெறித்தனமான டீசர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு யூட்யூபில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இல் உள்ளது. மேலும் இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *