actress malavika mohanan funny memes

தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த மாஸ்டர் நடிகை!

Articles Tamil

சமூக வலைதளங்களில் தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை மாளவிகா மோகனன் தமிழில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். பக்கா மாஸான கேங்ஸ்டர் திரைப்படமாக வெளியான பேட்ட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இதில் சசிகுமாரின் மனைவியாக வந்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் மாளவிகா மோகனன். இதில் கதாபாத்திரம் சரியாக கவனிக்கப்படாத நிலையில், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்த உடனேயே இவரைத் தேடி

Malavika mohanan Latest Image

பார்க்காத ரசிகர்களே இருக்க முடியாது. மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிப்போன மாளவிகா மோகனன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ட்ரெண்டிங்கில் இருக்க, கவர்ச்சி காட்டிய எக்கச்சக்கமான புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளார். மிக நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு கடந்த பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாகி இன்றுவரை வசூல் சாதனை புரிந்து சக்கைபோடு போட்டு வருகிறது. மாஸ்டரில் மாளவிகா மோகனுக்கு வெயிட்டான ரோல் கொடுத்திருப்பாங்க என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் மிகச் சொற்ப காட்சிகளை வைத்து இருந்தனர். எனினும் இப்பொழுது தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில்

Malavika Mohanan Latest Photo

நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இதை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார். இதைப்போல ஹிந்தியிலும், தெலுங்கிலும் பல திரைப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்தநிலையில் மாஸ்டர் படத்தில் இவர் கோவமாக பேசும் பல வசனங்களில் இவரது முகபாவனைகள் கடந்த சில நாட்களாகவே பங்கமாக கலக்கப்பட்டு வருகிறது. பல் துலக்குவது போல,பியர் பாட்டிலை ஓபன் செய்வது போல, பால் பாக்கெட்டை பல்லால் கடித்து ஓபன் செய்வது, கூல் மின்ட் போடுவது என படத்தில் ஆக்ரோஷமாக பேசிய உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளைப் பங்கமாக நெட்டிசன்கள் கலாய்க்கப்பட்டு வந்ததை பார்த்த மாளவிகா மோகனன் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் செம

கூலாக ட்வீட் பதிவை ஒன்று போட்டுள்ளார். அதில் ட்ரோல் செய்யப்பட்ட அனைத்து மீம்ஸ்களையும் பதிவிட்டு என்னுடைய சொந்த மீம்ஸ்களை பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதுபோல நான் பலவற்றை சமூக வலைதளங்களில் பார்த்து வந்தேன் ஆனால் இந்த நான்கு மீம்ஸ்களும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது . குறிப்பாக பல் துலக்குவது போல இருக்கும் மீம்ஸைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன். வாழ்க்கையில் நம்மளை நாமே பார்த்து சிரிக்க விட்டால் ரொம்பவும் போர் அடித்துவிடும் இல்லையா!. என தனக்கு வந்த எதிர்மறையான மீம்ஸ்களையும் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டுள்ள மாளவிகாவின் மனப்பக்குவத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *