chiranjeevi and vijay sethupathi

என்னோட நண்பன் விஜய் சேதுபதி… நடிகர் சிரஞ்சீவி மேடையில் புகழாரம்!

Articles Tamil

நடிகர் விஜய் சேதுபதியை என்னுடைய நண்பன் என புகழாரம் சூட்டியுள்ளார் சிரஞ்சீவி. நடிகர் விஜய் சேதுபதி இப்பொழுது தமிழ் திரைத்துறையையும் தாண்டி மலையாளம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் திரைப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனுஷை தொடர்ந்து பாலிவுட்டில் தீவிரமாக கால் தடத்தை பதித்து அடுத்தடுத்து நான்கு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் விஜய் சேதுபதி அதில் முன்னணி நடிகர் ஷாகித் கபூர் நடிக்கும் பிரமாண்ட வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

Vijay Sethupathi New Photo

இதில் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் ராஷி கன்னா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். லேகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் மும்பை கார் மற்றும் காந்தி டாக்ஸ் என அடுத்தடுத்து ஹிந்தி ப்ராஜெக்ட்களையும் கைநிறைய வைத்து செம பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு தமிழில் லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன் போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.ரங்கஸ்தளம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுகுமாரன் இயக்கும் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க அதில் வில்லன் கதாபாத்திரத்திற்கு விஜய்சேதுபதி அனுப்பப்பட்டார் ஆனால்

Vijay Sethupathi Latest Photo

தேதிகள் இல்லாத காரணத்தினால் அப்படத்திலிருந்து விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் ஆர்யா அந்த வேடத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஏற்கனவே தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் முக்கியமான வேடத்தில் தமிழ் மன்னராக நடித்து தெலுங்கு சினிமாவிலும் தன்னுடைய வேட்டையைத் தொடங்க இப்பொழுது உப்பண்ணா படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இதன் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் உப்பண்ணா படத்தின் விழா ஒன்றில் நடிகர் சிரஞ்சீவி விஜய்சேதுபதியை புகழ்ந்து பேசியுள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உப்பண்ணா பட விழாவில் சிரஞ்சீவி பேசியதாவது, இந்த உப்பண்ணா படத்தில்

அதிக ஓட்டுக்கள் போட வேண்டுமென்றால் அது விஜய் சேதுபதிக்காக தான் இருக்கும். மக்கள் செல்வன், என்னோட நண்பன். இவர் ஒரு சிறந்த மனிதர். மிகவும் பணிவானவர், நன்கு படித்தவர், புத்திசாலி, இந்தியாவிலேயே பல திறமைகளைக் கொண்ட மிகச் சிறந்த நடிகர். தமிழ்நாட்டில் இவருக்கு ஹீரோவாக நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் நான் ஹீரோவாகவே இருக்க வேண்டும் என நினைக்காமல் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வாழ்ந்த காட்ட வேண்டுமென நினைக்கிறார். சமீபத்தில் கூட மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இதில் ஹீரோவை விடவும் கனகச்சிதமாக நடித்துள்ளார்,ஒருகட்டத்தில் ஹீரோவை விட்டுட்டு பவானி கதாபாத்திரத்தை நான்

Vijay Sethupathi New Images

காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அதேபோல என்னுடைய சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நான் சிரஞ்சீவி என்ற ஒரு நபருக்காக வந்து நடித்துக் கொடுத்தார். ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் இருந்த பொழுது தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியில் ரசிகர்கள் கூட்டம் ஆரவாரமாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஹோட்டல் ஊழியர்கள் மிகுந்த வருத்தப்படுகிறார்கள் அதனால் வெளியில் போய் என்னுடைய ரசிகர்களாக இருப்பார்கள் எனவே நான் போய் சமாதானம் சொல்ல சென்றேன் ஆனால் அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள்.அனைவரும் விஜய் சேதுபதியின் பெயரை ஆரவாரமாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அப்புறம்தான் படக்குழுவினர் சொன்னார்கள் அவர்கள் விஜய் சேதுபதியை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று.இவ்வாறு தெலுங்கு சினிமாவில் முன்னணி

Vijay Sethupathi

நடிகராக இருக்கும் ஒருவர் விஜய் சேதுபதியை பற்றி இவ்வளவு பணிவுடன் தன்னுடைய நண்பன் என பெருமையாக சொல்லிக்கொண்டு பேசியுள்ளது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *