இந்திய கிரிக்கெட்டின் ஹிட்மேன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா இதுவரை கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இந்திய அளவில் முக்கியமான கிரிக்கெட் வீரராகவும் இப்பொழுது இருக்கும் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும் இருந்து வரும் ரோகித் ஷர்மா இப்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இடத்தில் பிரபல உணவகம் ஒன்றில் மாமிச இறைச்சி சாப்பிட்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பொழுது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு செல்லும் கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். எந்த ஒரு தனியார் உணவு விடுதியிலும் அனுமதியின்றி சாப்பிடுவது தவிர்க்க வேண்டும் என அறிவுரை படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இப்பொழுது இந்திய கிரிக்கெட் வீரர்கள் அந்த அறிவுரைகளை மீறி உணவகத்திற்கு சென்று சாப்பிட்டுல்லது சமூக வலைதளங்களில் மிக பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா உடன் மேலும் நான்கு வீரர்கள் ஆஸ்திரேலியாவிலுள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார்கள். அங்கு எதிர்பாராத விதமாக வந்த ரசிகர் ஒருவர் ரோகித் ஷர்மாவின் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பினால் நீங்கள் சாப்பிடும் உணவிற்கு முழு பில்லையும் நானே கட்டி விடுகிறேன் என கூறியுள்ளார். பின் தனது செலவில் பிஎஃப், ஃபோர்க், சிக்கன் உள்ளிட்ட உணவுகளை ஆர்டர் செய்து கொடுத்ததோடு அந்த பில்லை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களும் பதிவிட்டுள்ளார் அந்த ரசிகர்.
ரசிகர் செய்த இந்த செயல் இப்பொழுது ரோகித் ஷர்மாவிற்கு மிகப்பெரிய தலைவலியாக உருவாகியிருக்கும் நிலையில், கடந்த தீபாவளியன்று நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் பாதிக்கப்படும் அதனால் பட்டாசுகள் வெடிக்க கூடாது என செல்ல பிராணிகளின் மீதும் மிருகங்களின் மீதும் அன்பு கொண்டவராக காட்டிக்கொண்ட ரோகித் ஷர்மாவே இப்பொழுது இந்தியாவில் தெய்வமாக வணங்கப்படும் பசுவின் இறைச்சியை சாப்பிடுவது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகி ட்விட்டரில் #Rohitsharmaeatsbeef போன்ற ஹேஸ்டேக்கள் ட்ரெண்டாகி வரும் அதேசமயம், பசுவை இந்தியாவில்தான் தெய்வமாக .
கொண்டாடுகிறார்கள் ஆனால் ஆஸ்திரேலியாவில் அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சாப்பிடக்கூடிய மாமிச உணவு இதில் எந்த ஒரு தவறும் இல்லை, அதே போல ஒரு தனி மனிதன் தான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும் ரோகித் ஷர்மாவை பீஃப் சாப்பிடக்கூடாது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. என ஒரு சிலர் ரோகித் ஷர்மாவிற்கு ஆதரவளித்து வருகின்ற நிலையில் இப்பொழுது இணையதளத்தில் இந்த செய்தி மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகி ரோகித் ஷர்மாவால் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது