பொங்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்ற நிலையில் சிம்புவின் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள். வெகு நாட்களுக்கு பிறகு சிம்பு திரைப்படம் இப்பொழுது திரையரங்குகளில் அதுவும் பண்டிகைக் காலங்களில் வெளியாவதால் ரசிகர்கள் உச்சபட்ச கொண்டாட்டத்தில் இருந்து வரும் நிலையில் நேற்று சென்னையில் திருவிழாவைப் போல ஆடியோ லான்ட்ச் நடத்தப்பட்டு பாரதிராஜா, சிம்பு, சுசீந்திரன் ஆகியோர் பேச்சு இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் உடல் எடை மொத்தமும் கூடி ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்திய சிம்பு இப்பொழுது அனைவரும் ஆச்சரியப்படும்படி உடல் எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மான சிம்புவாக மாறியுள்ளதைப் பார்த்த அனைவரும் வாயடைத்து போய் உள்ளனர்.
சிம்பு,நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா பாலசரவணன், பாரதிராஜா ஆகியோரின் கூட்டணியில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் ஈஸ்வரன் திரைப்படம் பக்கா கமர்சியல் திரைப்படமாக குடும்பங்கள் கொண்டாடும் வகையில் உருவாகி இருக்க பொங்கலுக்கு கட்டாயமாக வெளியாக உள்ளது. ஏற்கனவே இதன் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் ஆடியோ லான்ட்சில் இதன் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களை உச்சகட்ட கொண்டாட்டத்தில் கொண்டு போய் நிறுத்தியது. சிம்பு இதுவரை பல்வேறு திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்திருந்தாலும் முதன் முறையாக பக்கா கிராமத்து கதாபாத்திரத்தில் இதுவரை கண்டிராத அளவிற்கு தர லோக்கலாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் காதல்,காமெடி, சென்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் இருக்கின்றது என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஈஸ்வரன் பட ஆடியோ லான்ட்ச் நேற்று சென்னையில் திருவிழா போல பிரம்மாண்ட கொண்டாட்டமாக கொண்டாடப்பட்ட நிலையில் சிம்பு ஆடியோ லான்ட்சில் பேசிய பேச்சு இப்பொழுது சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது. இதுநாள் வரையிலும் திரைப்படங்களில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்ததற்கு மனதளவில் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தேன். நம்மைச் சுற்றிக் முழுவதும் நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கிறது. அதையொல்லாம் யாரும் கண்டுகொள்ளாமல் நினைத்தை மட்டும் செய்து கொண்டே இருங்கள் வெற்றி உங்களுக்குத்தான். உங்களை குறை கூறுபவர்கள் எப்போதும் குறை கூறிக் கொண்டே தான் இருப்பார்கள் அதை பற்றி எல்லாம் கவலை படக்கூடாது.
நான் இதுவரை மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தேன் இப்போது அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன் . இனிமே சொல்றதுக்கு ஒன்னும் இல்ல எல்லாமே செயல்தான். ஈஸ்வரன் திரைப்படம் கண்டிப்பா உங்கள செம எண்டர்டெய்ன் பண்ணி திருப்தி படுத்தும், மட்டுமில்லாம அடுத்தடுத்து மாநாடு, பத்து தல மற்றும் மூன்று திரைப்படங்கள் வரிசையா ரெடியா இருக்க அதுவும் சீக்கிரம் வெளியில் வரப்போகுது அப்புறம் மறுபடியும் சுசீந்திரன் கூட சேர்ந்து இன்னொரு படம் பண்ணப்போறேன். இவ்வாறு ஆடியோ லான்ட்சில் சிம்பு பேசியது ரசிகர்களை புத்துணர்ச்சியாக்கி இருக்கும் நிலையில் அனைவரும் பொங்கலை எதிர் நோக்கி ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.