பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மா ஷாருக்கான்,அமீர்கான் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து நடிப்பினால் அனைவரையும் அசர வைத்து வந்த இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் பல திரைப்படங்களில் நடித்து
அசத்தி வந்த அனுஷ்கா ஷர்மா “பில்லாரி” என்ற திரைப்படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் அதில் ஒரு பாடலைப் பாடி பாடகியாகவும் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டு ரிலீஸான “ரப் நே பனா டி ஜோடி” படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து முதன்முறையாக பாலிவுட்க்கு அறிமுகப்படுத்தப்பட்ட அனுஷ்கா ஷர்மா தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர் வெற்றிகளால் இப்பொழுது முன்னணி நடிகையாக முன்னேறி உள்ளார். பிகே, என்ஹெட்ச்10,பாம்பே வாலட், சுல்தான், பில்லாரி என எக்கச்சக்கமான
திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகையாக நிரூபித்து பல விருதுகளையும் வென்று வந்த அனுஷ்கா ஷர்மா, ஜீரோ திரைப்படத்தில் மாற்றுத்திறனாளி விஞ்ஞானியாக நடித்து அனைவரையும் அசர வைத்தார். கதாநாயகி, தயாரிப்பாளர்,பாடகி என பன்முகங்களை கொண்டுள்ள அனுஷ்கா ஷர்மா கர்ப்பமான மகிழ்ச்சியான செய்தியை விராட் கோலி க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததை அடுத்து, தாய்மையை போற்றும் வகையில் பிரக்னன்சியில் பல்வேறு போட்டோ ஷூட்களை நடத்தி அந்தப்
புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதற்கிடையில் பிரக்னன்சியில் இருக்கும் போது அனுஷ்கா தலைகீழாக நின்று யோகா செய்தது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பி இருந்தாலும் மறுபுறம் அனுஷ்காவின் தைரியத்தை பாராட்டி பாராட்டுக்களும் குவிந்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் கோலி அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் விராட் கோலி தெரிவித்திருப்பதாவது
” இன்று மதியம் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள இந்த நற்ச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சுவாரசியமாக விரும்புகிறேன், உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் நலமுடன் இருக்கின்றனர். இந்த புதிய உறவுடன் அடுத்த அத்தியாயத்தை தொடங்க இருப்பதை நாங்கள் ஆசீர்வாதமாக கருதுகிறோம். இந்த தருணத்தில் எங்களுக்கு தனிமை தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். அன்புடன் விராட்”.
இவ்வாறு தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கோலிக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வர இந்த செய்தி இப்பொழுது வைரலாகி வருகிறது.